தங்கம்: பவுனுக்கு ரூ.416 உயர்வு


ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (செப்.28) பவுனுக்கு ரூ.416 உயர்ந்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை மாலையில் ரூ.61.90 - ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு சனிக்கிழமை ரூ. 62.40-ஆக சரிவடைந்தது.
தங்கத்தின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.935 உயர்ந்து சென்னை மார்க்கெட்டில் ரூ.49 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சனிக்கிழமை மார்க்கெட் நிலவரம்:
ஒரு கிராம் தங்கம் ரூ.2,827
ஒரு பவுன் ரூ.22,616
ஒரு கிராம் வெள்ளி ரூ.52.90
ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.49,400
வெள்ளிக்கிழமை நிலவரம்:-
ஒரு கிராம் தங்கம் ரூ.2,775
ஒரு பவுன் ரூ.22,200
ஒரு கிராம் வெள்ளி ரூ.51.90
ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.48,465

0 comments